News August 3, 2024

நாகையில் சதம் அடித்த வெயில்

image

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில், 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து தஞ்சையில் 102.2, நாகப்பட்டினத்தில் 101.48, பாளையங்கோட்டையில் 101.3, திருச்சியில் 100.94, கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT NOW!

Similar News

News November 8, 2025

நாகை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

நாகை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு <<>>கிளிக் செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 8, 2025

BREAKING: நாகையில் கிராம நிர்வாக அலுவலர் கொலை

image

வாழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன்(40). கிராம நிர்வாக அலுவலராக இருந்த இவர் முகம் மற்றும் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024-ல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த அவர், நேற்று அவ்வழக்கு விசாரணைக்காக சென்றிருந்தார். இந்நிலையில், இன்று காலை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்துடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

News November 8, 2025

நாகை: மீவர்களை விடுவிக்க கோரி தவெக சார்பில் போராட்டம்

image

நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 35 மீனவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மின்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். இந்நிலையில், மீனவர்களை விடுவிக்க கோரியும். இலங்கை கடற்படை, தமிழக அரசை கண்டித்தும் தவெக சார்பில் நேற்று அவுரித்திடலில் போராட்டம் நடைபெற்றது. இதில், தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் கலந்து கொண்டார்.

error: Content is protected !!