News April 1, 2025
நாகையில் உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

நாகை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. அரசு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்கள் பங்கேற்று பயன்பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News September 16, 2025
நாகை மக்களே.. நீங்களும் சொந்த தொழில் தொடங்கலாம்!

நாகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும். இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதனை LIKE ஸ்செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் தொழிலதிபர் ஆகுங்க!
News September 16, 2025
நாகை: அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களின் முன்னேற்றத்திற்காக தொண்டு செய்து வரும் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை இணையம் வாயிலாகவோ அல்லது நாகை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரிலோ பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். உரிய அனுமதியின்றி, உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் உரிய பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விற்பனையில் ஈடுபட வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.