News April 3, 2025

நாகையில் இலவச பயிற்சி

image

நாகை ஐ.ஒ.பி. ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. நாகை மாவட்ட கிராமபுறத்தை சேர்ந்த 45 வயதுக்குட்பட்டவர்கள் பயிற்சி பெறலாம். முன்பதிவிற்கு 6374005365 / 9047710810 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள நிறுவன இயக்குனர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

Similar News

News November 26, 2025

JUST IN நாகை: மிக கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 26, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் வரவழைக்கப்பட்டு, அதில் 486 மெட்ரிக் டன் யூரியா, 800 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

நாகை: இரண்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 30-ம் தேதி, 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் காலை 9.45 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், காரைக்கால், நாகை வழியாக வேளாங்கண்ணியை மாலை 5-30 வந்தடையும். இதேபோல முன்பதிவில்லாத மெமோ ரயில் விழுப்புரத்தில் காலை 9.10க்கு புறப்பட்டு மயிலாடுதுறை, காரைக்கால் வழியாக மதியம் 1.05-க்கு நாகை வந்தடையும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!