News March 24, 2025
நாகையில் இலவச ஒவிய பயிற்சி

நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள பொன்னி சித்திர கடல் ஆர்ட் அகடாமியில் ஒவிய திறனை வெளிக்கொணரும் வகையில் திறமை மிக்க ஆசிரியர்களை கொண்டு இலவசமாக ஓவிய பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு Nagai Art Academy என்ற சமூக வலைதளத்தை பின்பற்றி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News April 9, 2025
அட்சயலிங்க சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்

கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழாவை நடைபெற்று வருகிறது. இப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அஞ்சு வட்டத்தம்மன் திருத்தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளநிலையில், அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
News April 8, 2025
பழைய சாதம் நீர் அருந்த ஆட்சியர் வேண்டுகோள்

நாகை மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகம் நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்லக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். எழுமிச்சை வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்சி, பழைய சாதம் நீர், பழச்சாறுகள் அருந்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.
News April 8, 2025
தாட்கோ சார்பில் ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி, ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகமான தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு நாகை மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.