News August 9, 2024
நாகையில் இலங்கை மீனவர்கள் மீட்பு

இலங்கையை சேர்ந்த அகமது இர்பான் மற்றும் அஸ்டின் 20 நாட்களுக்கு முன்பு பைபர் படகில் மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனர்.படகு பழுதால் இருவரும் கடலில் தத்தளித்துள்ளனர்.உணவில்லாமல் அகமது இர்பான் படகில் மயங்கியுள்ளார். அப்போது இந்திய – இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் அவர்களை மீட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News July 5, 2025
நாகப்பட்டினம்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் நாகை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!
News July 5, 2025
நாகையில் சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி..!

நாகை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் (அ) அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு இந்த <
News July 5, 2025
நாகை புதிய கடற்கரையில் இன்று மாலை திரைப்படம் திரையிடல்

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ஜூலை 5 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதில் எல்லோரும் வந்து கலந்து கொண்டு திரைப்படத்தை கண்டு களித்து செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு ஆகாஷ் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.