News January 1, 2025
நாகையில் இருந்து இலங்கைக்கு போக்குவரத்து ரத்து

காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டது. பின்னர் கூடுதல் பயணிகள் செல்லும் வசதி, கட்டண சலுகை ஆகியவற்றுடன் நாளை 2 ஆம் தேதி முதல் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடல் தட்ப வெப்ப சூழ்நிலையால் இலங்கை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
நாகை: பெண்கள் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு

நாகை மாவட்ட பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள்<
News December 20, 2025
நாகை: மக்ககளை சந்தித்து உரையாடிய துணை முதல்வர்

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று நாகை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். இந்நிலையில் இன்று காலை வேளாங்கண்ணியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், அங்கிருந்த மக்களை சந்தித்து நிறை குறைகளை கேட்டறிந்தார்.
News December 20, 2025
நாகை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் நாகை மாவட்டத்தில் இருந்து மட்டும் 57,338 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <


