News March 25, 2025
நாகர்கோவில்-கச்சிகுடா சிறப்பு ரயில் நீட்டிப்பு

நாகர்கோவிலில் இருந்து கட்சிகுடா வரை செல்லும் ரயில் வாராந்திர சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் நிலையில்,இந்த ரயில் வருகிற மே மாதம் நான்காம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிருவாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News July 5, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.5) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை 43.05 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை 71.65 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை 13.42 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை 13.51அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 482 கனஅடி, பெருஞ்சாணிக்கு 187 கன அடி நீர்வரத்தும் உள்ளது.
News July 5, 2025
நாகர்கோவில் ரயில் 1 மணி நேரம் தாமதம்

திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவில் வரை வாரம் 4 நாட்கள் மட்டும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இரவு 9 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். ஆனால் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் ரயில் பயணிகள் அவதி அடைந்தனர். இந்நிலையில் ரெயில் பணிகள் சிலர் ரயில்வே மேலாளர் அலுவலகம் சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
News July 5, 2025
குமரியில் 120 கிமீ தேசிய நெடுஞ்சாலை அமைக்க நடவடிக்கை

தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 120 கி.மீ தூரத்திற்கு NH 32 அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை தற்போது உள்ள சாலையில் இருந்து தனியாக அமைக்கப்படுவதால், சுமார் 600 எக்டேர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு, எந்தெந்த சர்வே எண்களில் உள்ள நிலங்கள் வழியாக சாலை அமைய உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.