News April 11, 2025

நாகர்கோவிலில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

நாகர்கோவிலில் செயல்படும் தனியார் சாப்டுவேர் நிறுவனத்தில் 50 ஆராய்ச்சி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளங்கலை பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News May 7, 2025

மே தின பேரணியில் கலந்து கொண்ட குமரி எம்எல்ஏ

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சார்பில் குலசேகரத்தில் மே தின விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று (மே 1) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நடைபெற்ற பேரணியிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

News May 7, 2025

குமரி விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நாற்றங்கால் பணிகளை தொடங்காமல் உள்ள விவசாயிகள் அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொண்டு மே மாத இறுதிக்குள் பணிகளை முடித்து ஜூன் மாத தொடக்கத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தவுடன் வயல்களில் நெல் நாற்று நடவு பணிகளை மேற்கொள்ள முன் ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

News May 7, 2025

குமரி மாவட்டத்தில் 1522 கேமராக்கள் நிறுவ முடிவு

image

குமரி மாவட்டத்தில் ஊர் காவல் கண்காணிப்புத் திட்டத்தை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் படி ஒரு கிராமத்தில் ஒரு காவலர் பணியமர்த்தப்பட்டு இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 761 கிராமங்களில் 1522 கேமராக்கள் பொருத்துவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.

error: Content is protected !!