News May 7, 2025
நாகப்பட்டினம்: மே 1-ம் தேதியே கடைசி நாள்

மக்கா நெகிழிப் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் தன்மை உள்ள பொருட்களை பயன்படுத்தும் சிறந்த மூன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதினை வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதற்கு தகுதியுடைய நிறுவனங்கள் மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்க மே 1-ம் தேதியே கடைசி நாள்.
Similar News
News October 25, 2025
நாகை: 72,736 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!

நாகை மாவட்டத்தில், 2025 குறுவைப் பருவத்தில் இதுவரை 72,736 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 மடங்கு அதிகம். இதுவரை 14,600 விவசாயிகளுக்கு ரூ. 175.99 கோடி தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக 124 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
நாகை: புயலின் போது பொதுமக்கள் செய்ய வேண்டியவை!

நாகை, பருவமழையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆட்சியர் தெரிவித்ததில், புயலின் போது வீட்டில் அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடி இருப்பதை உறுதி ப்படுத்தவும், விலை உயர்ந்த பொருட்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் மற்றும் மண்ணெண்ணெய், டார்ச்கள், உதிரி பேட்டரிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்கவும், முன்கூட்டியே மரக்கிளைகளை அகற்றவும் என தெரிவித்தார்.
News October 25, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!


