News March 28, 2025
நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, இன்று (மார்.28) நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனைக்கும், விமான நிலையத்திற்கு கடைசி மெட்ரோ இயக்கப்படும். ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
சென்னை பெருநகரில் ஜூலை 21 வரை வாரண்டின்றி கைது

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், காவல்துறை அதிகாரிகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என சந்தேகப்பட்டால், வாரண்ட் இல்லாமல் கைது செய்ய பிரிவு 41-ன் கீழ் அதிகாரம் வழங்கியுள்ளார். இந்த உத்தரவு ஜூலை 6 இரவு 12 மணி முதல் ஜூலை 21 இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
வெளிநாட்டு ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் கட்டாயம்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூர் கோடாலி தைலம் இறக்குமதி வழக்கில், உரிமம் இல்லாததால் சுங்கத்துறை தடை விதித்தது. இறக்குமதியாளர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருந்து இறக்குமதியில் பொதுநலனே முக்கியம் எனவும் உரிய உரிமம் பெற்ற பின்னரே சரக்குகளை விடுவிக்க முடியும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
News July 6, 2025
சென்னை வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6 முதல் 10 வரை சென்னை மக்கள் இரவு 8 மணி முதல் 8.06 மணி வரை வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். டக்குனு உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி பாக்க சொல்லுங்க