News May 17, 2024
நள்ளிரவில் நேர்ந்த துயர சம்பவம்!

மதுரை மதிச்சியம் சப்பானி கோவில் தெரு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியம் (30) என்பவர் வழக்கம் போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று இரவு பெய்த மழையினால் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பாலசுப்ரமணியன் மீது கட்டிட சுவர் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி மதிச்சியம் போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
மதுரை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 5, 2025
மதுரையில் பரவும் வைரஸ் காய்ச்சல்… மக்களே உஷார்

மதுரை அரசு மருத்துவமனையில் 28 குழந்தைகள், 33 பெரியவர்கள் என மொத்தம் 61 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 64 வயது ஆண், 30 வயது பெண் என இருவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இத்துடன் மதுரை புதூர் 13 வயது சிறுமி முதல் நிலை (ஹெச்1 என்1) பன்றி காய்ச்சல் பாதிப்பு, இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
News December 5, 2025
மதுரை: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


