News February 16, 2025
நல்லபள்ளி அருகே தீ விபத்தில் ஒருவர் பலி

நல்லபள்ளி அடுத்த காணாபட்டி நள்ளிரவு 12 மணி அளவில் வெள்ளையன் முன்னாள் மந்திரி கவுண்டர் வீட்டின் முன்பு குடிசை வீடு பயங்கர தீ விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தீயில் கறிகி உயிரிழந்தார். மேலும் முதியவரை அருகில் இருந்தவர்கள் தீக்காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 3, 2026
தருமபுரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (ஜன.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. தருமபுரி நான்கு ரோடு அருகில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ள இம்முகாமில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல் போன்ற பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
News January 3, 2026
தருமபுரியில் 410 போ் உயிரிழப்பு!

தருமபுரி மாவட்டத்தில் 2025 கடந்த ஆண்டில் சாலை விபத்துகள் மூலம் மொத்தம் 410 போ் உயிரிழந்துள்ளனா். 2024-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 30 போ் அதிகம் என மாவட்ட நகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவித்துள்ளன. 2025-ல் சாலை போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 1,76,664 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறலில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 5 கோடியே 23 லட்சத்து 69 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
News January 3, 2026
தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

தருமபுரி மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (ஜன.03) காலை வரை,காவல்துறை ரோந்து விவரம் வெளியானது. மாவட்ட ரோந்து அதிகாரி ராமமூர்த்தி: 9498145110, தருமபுரி S/D: தொப்பூர் புவனேஸ்வரி தொப்பூர் பி.எஸ் :9498104783, அரூர் ஜெய்கீர்த்தி கம்பைநல்லூர் பி.எஸ் :8838218564, பென்னாகரம் சுரேஷ் ஏரியூர் பி.எஸ்: 9962375712, பாலக்கோடு பாலசுந்தரம் பாலக்கோடு பிஎஸ் 9498110707, என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


