News April 11, 2025
நலவாழ்வு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்களை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் விழாவில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி, கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கான மருத்துவ உபகரணங்களை தூத்துக்குடி எம்.பி கனிமொழி வழங்கினார். இதில் அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் இளம்பகவத் உடனிருந்தனர்.
Similar News
News November 24, 2025
தூத்துக்குடி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News November 24, 2025
தூத்துக்குடி: மாடு முட்டி தொழிலாளி பலி

தூத்துக்குடி கே வி கே நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (43). இவர் ஜாகீர் உசேன் நகரில் உள்ள மாட்டு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கடைக்கு வேனில் இருந்து இவர் மாடுகளை இறக்கிக் கொண்டிருந்த பொழுது ஒரு மாடு இவரது வயிற்றில் முட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது பற்றி தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
News November 24, 2025
தூத்துக்குடிக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.


