News April 18, 2025

நலத்திட்ட உதவி வழங்குகிறார் முதல்வர்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 18) நடைபெறும் அரசு விழாவில், 2 லட்சம் பேருக்கு ரூ.357 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடக்கும் இந்த விழாவில், முதல்வர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், ரூ.418 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைக்க உள்ளார். ரூ.390 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.

Similar News

News January 9, 2026

திருவள்ளுர்: சிலிண்டர் மானியம் – ஒரே ஒரு SMS போதும்!

image

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 9, 2026

திருவள்ளூரில் ரூ.2.12 கோடி விபூதி!

image

திருவள்ளூர் பகுதியில், குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக கூறி 15 பேரிடம் ரூ.2.12 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக, ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு-க்கு (CCB) ஒரு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்து வந்த சாரா ஜோஸ்பின் பியூலா, கார்த்திகேயன், தினகரன், சித்ரா ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 9, 2026

திருவள்ளூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை-தந்தை,மகனுக்கு சிறை!

image

திருவள்ளூரைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கடந்த 2021-ல், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (56) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை தட்டிக்கேட்ட சிறுமியின் தாயாரை, முருகனின் மகன் ராஜ்குமார் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த வழக்கு விசாரணை நேற்று முடிந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி முருகனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், ராஜ்குமாருக்கு 5 ஆண்டுகள் தண்டையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!