News November 23, 2024
நம்ம கோவைக்கு 220வது பிறந்தநாள்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர், கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரம், கொங்கு தமிழ், இதமான வானிலை என பல்வேறு சிறப்புகளுக்கு உரிய கோயம்புத்தூருக்கு நாளை 220வது பிறந்த நாள். முதலில் ‘கோவன்புதூர்’ என அழைக்கப்பட்டு, பின்னர் கோயம்புத்தூர் என மாறியது. 1804ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டு தோறும் நவம்பர் 24ம் தேதி கோயம்புத்தூர் தினமாக கொண்டாடப்படுகிறது.
Similar News
News November 20, 2025
பள்ளிகளில் மனநல ஆலோசகர் அவசியம்: வானதி சீனிவாசன்

வால்பாறை அருகே 9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பதிவில், குழந்தைகள் மனரீதியாகப் பாதுகாப்பாக இருக்க பள்ளிகளில் மனநல ஆலோசகர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
கோவை: ரயில்வேயில் 8,850 பணியிடம்! ரூ.35,000 சம்பளம்

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!
1)மொத்த பணியிடங்கள்: 8,850
2)கல்வித் தகுதி: 12th Pass, Any Degree.
3)சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
4)விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
5)ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News November 20, 2025
கோவை: 6-ம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது!

கோவை, சூலூர் அருகே சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெ. கிருஷ்ணாபுரத்தில் சூலூர் மருத்துவமனை மருத்துவர் கஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 6ஆம் வகுப்பு படித்த முத்துலட்சுமி என்பவர் கிளினிக் நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்து ஆங்கில மருந்துகள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


