News October 24, 2024

நன்றி கெட்ட மனிதரை விட நாய்கள் மேலடா

image

மலேசியாவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கார் விபத்தில் படுகாயம் அடைந்த கணவன் படுத்த படுக்கையானார். மனம் தளராத அவரது மனைவி 6 ஆண்டுகள் அவரை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். அண்மையில் உடல்நலம் தேறிய கணவன், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்துள்ளார். அந்த பெண்ணோ, ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என கணவனை வாழ்த்தினாலும், ‘நன்றி கெட்டவன்’ என அந்நபரை நெட்டிசன்கள் திட்டுகின்றனர்.

Similar News

News November 21, 2025

ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு

image

திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த ஆகஸ்டில் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடத்தியிருந்தது. அப்போது, இந்திராணி வீட்டில் 15 மணிநேரத்துக்கும் மேலாக ED சோதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 21, 2025

மீனவ நண்பனாக திமுக அரசு செயல்படும்: CM ஸ்டாலின்

image

உழைப்பும் உறுதியும் மிக்க மீனவத் தோழர்கள் அனைவருக்கும் உலக மீனவர் நாள் வாழ்த்துகள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் உயர்வு, மானிய டீசல் அளவு உயர்வு, கடனுதவி, மீன்பிடித் துறைமுகங்கள் என மீனவர்களின் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றும் மீனவ நண்பனாக திமுக அரசு தொடரும் என்று கூறியுள்ளார்.

News November 21, 2025

அவர் தான் MS தோனி: மாஸ் காட்டிய சஞ்சு

image

மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சனை காண CSK ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தோனி குறித்து சஞ்சு பேசியது வைரலாகிறது. அங்கு (CSK) தனக்கு தெரிந்த நிறைய நண்பர்கள் இருக்கின்றனர், ஆனால் அங்கு ஒருவர் தனித்துவமாக இருக்கிறார், அவரை அனைவருக்கும் தெரியும், அவர் தான் MS தோனி என மாஸாக தெரிவித்துள்ளார். தோனி – சஞ்சு on field மாஸை பார்க்க யாரெல்லாம் வெயிட் பண்றீங்க?

error: Content is protected !!