News May 17, 2024
நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அரசு பொது நூலகத்திற்கு கம்ப்யூட்டர் மேஜைகள் வாங்குவதற்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு வள்ளுவர் வாசகர் வட்ட தலைவரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான அய்யாக்குட்டி தலைமை வகித்தார். மேஜைகள் வாங்குவதற்கு நன்கொடை வழங்கிய புனித லூக்கா சமுதாய கல்லூரி இயக்குனர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 22, 2025
தூத்துக்குடி: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 22, 2025
தூத்துக்குடியில் மிதமான மழை.. 196 மி.மீ மழை பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிதமான மழையே பெய்தது. ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 35 மி.மீ., மழையும் ஒட்டப்பிடாரத்தில் 34 மி.மீ., மழையும் மாவட்ட முழுவதும் மொத்தம் 196.90 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
News November 22, 2025
தூத்துக்குடி: SIR நிரப்பினால் தான் ஓட்டு! கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR படிவத்தை நிரப்புவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஆகவே, வாக்காளர் பெருமக்கள் இதனைத் தவறாமல் பயன்படுத்தவும், மேலும், படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கும் வாக்காளர்களின் பெயர் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


