News March 29, 2025
நந்தனம் கல்லுரியில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், இன்று (மார்.29) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. காலை 8 மணியளவில் தொடங்கி பிற்பகல் 3 மணிவரை நடைபெறும். இந்த முகாமில் சுமார் 20,000 இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த <
Similar News
News November 3, 2025
சென்னையில் மின்நுகர்வோர் கூட்டம்

மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் கே.கே.நகர் கோட்டங்களில் நாளை (நவ.04) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மையம், மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய மின் பகிர்மான வட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
News November 2, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (02.11.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News November 2, 2025
சென்னையில் வரப்போகும் RRTS ரயில்கள்

சென்னையில் மெட்ரோவிற்கு இடையே இன்னொரு பக்கம் RRTS ரயில் சேவையும் வர உள்ளது. இதற்கான சர்வே பணிகள் தொடங்கி உள்ளன. பரந்தூரைச் சென்னையின் மையப்பகுதியுடன் இணைக்கும் வகையில் இந்த ஆர்ஆர்டிஎஸ் ரயில் கொண்டு வரப்பட உள்ளது. மொத்தமாக மூன்று வழித்தடங்களில் உருவாக்கிட விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விடப்பட்டு உள்ளது.


