News October 24, 2024
நத்தம் அருகே தீ விபத்து

திண்டுக்கல், நத்தம், வேலம்பட்டியில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் மொத்த விற்பனை கடை உள்ளது. இந்நிலையில் இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் துணிகள் மற்றும் தயாரிப்பு பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயை பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 14, 2025
பழனி அருகே நேபாள பெண் விபரீதம் முடிவு!

திண்டுக்கல்: நேபாளம் நாட்டை சேர்ந்த சங்கர் சுணார் (வயது 25). இவர் தனது மனைவி ஜனப் பரியாருடன் (18) பழனி அருகே ஆண்டிப்பட்டியில் தனியார் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தார். ஜனப்பரியார் அடிக்கடி செல்போன் பார்த்ததைசுணார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜனப் பரியார் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நெய்காரப்பட்டி போலீசார் விசாரணை!
News December 13, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (13.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
JUST IN: திண்டுக்கல் அருகே சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனமும் மினி வேனும் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மணியக்காரன்பட்டியைச் சேர்ந்த செல்வம்(45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த வத்தலகுண்டு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


