News March 18, 2024

நத்தம் அருகே அரசு பேருந்து மோதி இளைஞர் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏரக்காபட்டி பகுதியில் (மார்ச் 18 ) இன்று காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூங்கில்பட்டியை சேர்ந்த அழகு பாண்டி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 5, 2025

ஏவல், பில்லி சூனியம் நீக்கும் திண்டுக்கல் கோயில்!

image

திண்டுக்கல், வேடசந்தூரில் அழகிய நாகம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு வேண்டிய வரம் தந்து காத்து அருள்கிறாள் நாகம்மன். சுமார் 400 ஆண்டுகள் முன்பு கோயில் தோன்றியது. ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக நாகம்மன் உள்ளார். கோயிலின் தல விருட்சமாக வேம்பும், அரசும் உள்ளது. தல விருட்சத்தை சுற்றிவந்து மாங்கல்யம் கட்டி தொங்க விட்டால் திருமணத்தடை விலகும், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

News July 5, 2025

திண்டுக்கல்: ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

image

திண்டுக்கல் பெருமாள்கோவில்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், காலியாக உள்ள ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு, தற்காலிக தொகுப்பூதியத்தில் பணிபுரிய, உரிய கல்விச் சான்றுகளுடன், விண்ணப்பங்களை திண்டுக்கல் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ (அ) தபால் மூலமாகவோ வரும் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News July 5, 2025

திண்டுக்கல்: 4,6,6,6,6,6 விளாசிய விமல்!

image

திண்டுக்கல்: நத்தம் பகுதியில் நேற்று(ஜூலை 4) இரவு நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சென்னை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் திண்டுக்கல் அணி சென்னை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மேலும் இந்த போட்டியில் சென்னை டிராகன்ஸ் வீரர் விமல் குமார் போட்டியின் 17ஆவது ஓவரில் 4,6,6,6,6,6 என 34 ரன்கள் விலாசி சாதனை படைத்தார்.

error: Content is protected !!