News March 18, 2024
நத்தம் அருகே அரசு பேருந்து மோதி இளைஞர் பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏரக்காபட்டி பகுதியில் (மார்ச் 18 ) இன்று காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூங்கில்பட்டியை சேர்ந்த அழகு பாண்டி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 15, 2025
ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது

அம்மையநாயக்கனூரில் 2007ஆம் ஆண்டு நடந்த பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில், ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்த அழகுமலை (54) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் பிணையில் வெளிவந்த அவர், 18 ஆண்டுகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் அழகுமலையை கைது செய்து, நீதிமன்றக் காவலில் ஒப்படைத்தனர்.
News November 15, 2025
திண்டுக்கல்: ATM-ல் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ATM-ல் பணம் எடுக்க செல்லும்போது, முன்பின் தெரியாத அந்நிய நபர்களிடம் உங்கள் ATM கார்டை கொடுத்து உதவி பெறுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறியாத நபர்கள் ஏமாற்றி பணத்தை திருடும் வாய்ப்புள்ளதாகவும் போலீசார் எச்சரித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 15, 2025
திண்டுக்கல்: ஆதார் அட்டையில் திருத்தமா?

திண்டுக்கல் மக்களே, “ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


