News August 4, 2024
நட்புன்னா என்னன்னு தெரியுமா?

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் யரும் இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆறு, கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது, காதல் என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் நாம் செய்த சேட்டைகள் பல உண்டு. அந்த வகையில் உங்க நண்பன் பெயர்,அவருடன் நீங்கள் செய்த சேட்டையை கீழே கமெண்ட் பண்ணி, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
Similar News
News December 4, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவர் தங்கை முறை உள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் அம்மாவுக்கும், மணிகண்டனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
விருதுநகர்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்படும். இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கு <
News December 4, 2025
விருதுநகர்:அரசு பஸ்ஸில் சில்வர் டம்ளரில் மது அருந்திய டிரைவர்

ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் அரசு பஸ், நேற்று முன்தினம் இரவு புது பஸ் ஸ்டாண்ட் வந்தது. பஸ் டிரைவர் பாலமுருகன், எவர் சில்வர் டம்ளரில் ஊற்றி, காபி போல பிறர் நினைத்துக் கொள்வர் என கருதி, மது அருந்திக் கொண்டிருந்தார். இதை கவணித்த பயணியர், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பஸ்சில் இருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மாற்று டிரைவர் மூலம் ஏற்பாடு செய்தனர்.


