News April 16, 2024

நடை பயிற்சியாளர்களிடம் வாக்கு சேகரிப்பு 

image

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயவர்தன் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News January 5, 2026

சென்னை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

News January 5, 2026

மேற்கு மாம்பலம்: முன்னாள் ராணுவ வீரர் பலி!

image

சென்னை: மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(92). முன்னாள் ராணுவ வீரரான இவர், நேற்று(ஜன.4) மாலை நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பைக் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 5, 2026

சென்னையில் நிறம் மாறும் அதிசய லிங்கம்

image

சென்னை அயனாவரத்தில் பிரசித்தி பெற்ற பரசுராம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பரசுராமர் சிவனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், இங்குள்ள சிவ லிங்கம் ஆவணி- மார்கழி மாதம் வரை கருப்பு நிறமாகவும், பங்குனி- ஆடி மாதம் வரை பொன் நிறமாகவும் காட்சியளிக்கிறது. இங்கு வந்து வழிபட்டால், பாவங்கள் நீங்கி லிங்கம் நிறம் மறுவதுபோல் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!