News November 14, 2024
நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னையில் தெலுங்கு பேசும் மக்கள் பற்றி நடிகை கஸ்தூரி இழிவாக பேசியது பெரும் பேசுபொருளாக மாறியது. இதற்கு பலத்த கண்டனம் எழுந்ததுடன் வழக்குகளும் பதிவானது. இந்த நிலையில், கஸ்தூரி முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் கஸ்தூரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட் இன்று (நவ.14) உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News November 19, 2024
மதுரையில் 10,000 பேருக்கு பிரியாணி விருந்து
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நவ.27ல் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்.அவரின் 47ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மேலூரில் 10,000 பேருக்கு கோழி லெக்பீஸ், மட்டன் பிரியாணி விருந்து நவ.25ல் நடைபெற உள்ளது. அமைச்சர் மூர்த்தி இதனை தொடங்கி வைக்கிறார். இதற்காக பந்தல் கால் அமைக்கும் பணியினை தலைமை கழக செயற்குழு உறுப்பினர் கரு.தியாகராஜன், நகர் மன்ற தலைவருமான முகமது யாசின் இன்று துவக்கி வைத்தனர்.
News November 19, 2024
மதுரையில் 23 ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரை மாநகரில் மோட்டார் வாகன போக்குவரத்து துறையுடன் இணைந்து மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் தகுதிச் சான்று மற்றும் உரிமம் இல்லாத 23 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிற விதிமீறலுக்காக 50 ஆட்டோக்கள் மீது போக்குவரத்து காவல்துறை சார்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
News November 19, 2024
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வெங்கடேசன் எம்.பி கண்டனம்
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி முதல் அழகர்மலை வரை பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. கீழடி அகழாய்வுக்கு அனுமதி தராத ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி அளித்துள்ளது. எனவே தமிழக அரசு இத்திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.