News August 23, 2024
நடிகை கவுதமி நிலமோசடி வழக்கு ஒத்திவைப்பு

நடிகை கவுதமியிடம் சினிமா பைனான்சியர் அழகப்பன், ராமநாதபுரத்தில் நிலம் வாங்கித் தருவதாக ரூ.3 கோடி பெற்றுள்ளார். ஆனால் நிலம் வாங்கித் தராமல் மோசடி செய்துவிட்டதாக கவுதமி அளித்த புகாரின்படி ராமநாதபுரம் போலீசார் அழகப்பனை கைதுசெய்தனர். கோர்ட்டு அனுமதியுடன் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணையை வரும் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Similar News
News December 11, 2025
ராமநாதபுரம்: அதிமுக MLA சீட்…. முக்கிய அறிவிப்பு

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பரமக்குடி (தனி) , திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் டிச.23க்குள் தங்களது விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம். இவ்வாறு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (டிச.11) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News December 11, 2025
ராமநாதபுரம்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

ராமநாதபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலைய விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
ராமநாதபுரம்: 4 நாட்களாக மீனவரை தேடும் பணி

தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தய்யா. இவரது மகன் ஆரோக்கிய கிங்ஸ் 25, ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து படகில் டிச.,6ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அன்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி கடலில் விழுந்துள்ளார். மீனவர்கள் அப்பகுதியில் 4 நாட்களாக தேடி வருகின்றனர். இந் நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் அமிர்தய்யா குடும்பத்தினருடன் வந்து நேற்று மனு அளித்தார்.


