News September 13, 2024

நடிகைகள் பிரச்சனை குறித்து அமைச்சர் பதில்

image

கோவில்பட்டியில் நேற்று செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் திரைப்படத்துறை பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க தனியாக ஒரு கமிட்டி உள்ளது; அதில் மனநல மருத்துவர் உள்ளார்; எந்த நேரத்தில் புகார் தெரிவித்தாலும்> நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

Similar News

News November 26, 2025

தூத்துக்குடி: ஆட்டோ கவிழ்ந்து குழந்தை பலி

image

தூத்துக்குடி: வேம்பாரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி மைக்கேல் ராஜ் தனது ஒரு வயது மகன் மித்ரன் மற்றும் மனைவியுடன் சாயல்குடிக்கு நேற்று ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, கடற்கரை சாலையில் திடீரென ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த மித்ரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2025

தூத்துக்குடி: மக்களே., இந்த தகவல் உங்களுக்கு தான்!

image

மாதந்தோறும் நடைபெறும் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டமானது வரும் டிச. 2-ம் தேதி திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 9-ம் தேதி தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 16-ம் தேதி கோவில்பட்டியிலும், 23ம் தேதி தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. பொதுமக்கள் தங்களுக்கான மின் தொடர்பான புகார்களுக்கு இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.

News November 25, 2025

தூத்துக்குடி: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா?

image

தூத்துக்குடி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க போன் -ல இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்க போன் நம்பர் பதிவு செய்யுங்க. இனி உங்க போனுக்கு தேவை இல்லாத அழைப்புகள் , மெசேஜ் வராது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!