News October 24, 2024
நடிகர் விஜய்க்காக நடிகர் தாடி பாலாஜி சிறப்பு பூஜை

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீ ராஜ குபேர சித்தர் பீடம் பொன்னேரிகரைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, நடிகர் தாடி பாலாஜி இன்று த.வெ.க. பேட்ச் உள்ளிட்டவற்றை பூஜையில் வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தபோது, விஜய் தனது நெருங்கிய நண்பர் என்பதும் அவர் வெற்றி பெற சிறப்பு பூஜை செய்ததாகவும் தெரிவித்தார்.
Similar News
News November 14, 2025
குன்றத்தூரில் துணை மின் நிலையத்தை திறந்த அமைச்சர்

இன்று (நவ.14) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்தார்கள். உடன் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் உள்ளனர்.
News November 14, 2025
காஞ்சிபுரம்:லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27237139) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
News November 14, 2025
காஞ்சி: கார் ஷோ ரூமுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு!

காஞ்சி, வெள்ளைகேட் அருகில் தனியார் கார் ஷோரூம் செயல்படுகிறது. நேற்று யாரும் எதிர்பாராத வகையில் பாம்பு ஒன்று ஷோரூமில் புகுந்து விட்டது. இதை கவனித்த பணியாளர்கள் பாம்பை விரட்ட முயன்றனர். பாம்பு, கார் உதிரிபாகங்கள் வைத்திருந்த அறைக்குள் சென்று பதுங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 6 அடி நீளமுள்ள பாம்பை மீட்டு, வனத்திற்குள் விட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


