News August 18, 2024
நடிகர் கிங்காங்கின் தாயார் காலமானார்

திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் கிங்காங்கின் தாயார் காசியம்மாள்(72) இன்று காலமானார். நள்ளிரவில் தாயாரிடம் ஆசீர்வாதம் பெற்ற நிலையில், சுமார் 12.30 மணி அளவில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். கிங் காங், பலவேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். இவரது தாயாரின் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
தி.மலை: நிலத்தில் கிடந்த சடலம்; கிணற்றில் வீசிய ஓனர்!

செங்கம், குப்பத்தை சேர்ந்த வாலிபர்கள் சாமுண்டி, அருண்குமார், ஹரிஷ், சிலம்பு ஆகியோர் நவ.12ம் தேதி முயல்வேட்டைக்கு சென்றனர். இதில், ஹரிஷ், சிலம்பு வீடு திரும்ப, சாமுண்டி, அருண்குமார் தொடர்ந்து வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை இவர்கள் சேட்டு என்பவர் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளனர். செங்கம் போலீசார் விசாரித்ததில், பாஷா நிலத்தில் உள்ள மின்வேலியில் இறந்ததும், அவர் இவரை கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.
News November 14, 2025
தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 13, 2025
தி.மலை: முன்னாள் படை வீரர் குடும்பத்திற்கு முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், முன்னாள் படை வீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு அங்கீகரித்த தையல் பயிற்சி சான்றிதழ் பெற்றிருந்தால், விலையில்லா தையல் இயந்திரம் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 27க்குள் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


