News August 25, 2024
நடிகர் கமலை சந்தித்த புதுக்கோட்டை முன்னாள் எம்.பி.

புதுக்கோட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் கட்சி மாநில தலைவருமான சு.திருநாவுக்கரசர் மகன் திருமண விழாவை முன்னிட்டு இன்று சென்னையில் மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமலஹாசனை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.
Similar News
News November 27, 2025
புதுக்கோட்டை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News November 27, 2025
புதுக்கோட்டை: பைக்கில் இருந்து விழுந்த இளைஞர் பலி

ராப்பூசல் புளியம்பட்டியை சேர்ந்தவர் சோலைராஜா. இவரது நண்பர் கத்தங்குடிப்பட்டியை சேர்ந்தவர் மெய்யர்(எ) ரோஷன். இருவரும் பைக்கில் பெருங்குடிபட்டி, செங்குளம் கலங்கி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக மண் மேட்டு பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சோலைராஜா பரிதாபமாக பலியானார். ரோஷன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரனை மெற்கொண்டு வருகின்றனர்.
News November 27, 2025
புதுக்கோட்டை: வெறி நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியில் கடந்த சில நாட்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விவசாய நிலத்தில் மேய்ந்த ஆடுகளை வெறிநாய் கடித்ததில் 6 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் பலியாகின. எனவே இந்த வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


