News January 1, 2025
நடப்பாண்டில் விபத்தில் சிக்கி 280 பேர் பலி

கோவை மாநகரில் நடப்பாண்டில் நிகழ்ந்த விபத்தில் அதிவேகம், அலட்சியமாக வாகனத்தை இயக்குதல் போன்ற காரணங்களுக்காக விபத்து ஏற்பட்டுள்ளது. மாதத்தில் 25 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர். மாதம் 75 பேர் காயமடைகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் வரை 286 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 883 பேர் படுகாயமடைந்துள்ளனர் என போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 21, 2025
கோவையில் பட்டாசு வெடிப்பு – 36 பேர் மீது வழக்குப்பதிவு!

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த நேரத்தை தாண்டி பட்டாசுகளை வெடித்தாக கோவையில் 36 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
மேட்டுப்பாளையத்தில் ஆண் சடலம் மீட்பு!

மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் அருகே முதியவர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் ஜிஎச் அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் இறந்த முதியவர் மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையத்தை சேர்ந்த அய்யாசாமி என்பதும், மயங்கி விழுந்து உயிரிழந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News October 21, 2025
வால்பாறையில் தொடரும் அவலம் கண்டுகொள்ளுமா அரசு?

கோவை வால்பாறையில், கல்லார்குடி, சங்கரன்குடி, உடுமன்பாறை, பாலகணாறு, நெடுங்குன்றம் உள்ளிட்ட, 13 செட்டில்மென்ட் பகுதிகளில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இங்கு ரோடு, மின்சாரம், நடைபாதை, வீடுகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கண்டுகொள்ளுமா அரசு?