News September 13, 2024
நடப்பாண்டில் இரண்டு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “2019-இல் உயர்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதி இளம் கவிஞர் போட்டி இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு, பழனி திண்டுக்கல் கல்லூரி மாணவர் முகமது அன்சாரி, சேலம் கல்லூரி மாணவி நிவேதா இருவருக்கும் ஒரு லட்சம் பரிசு தொகையுடன் விருது வழங்கப்பட்டது.
Similar News
News November 27, 2025
சென்னையை உலுக்கிய சம்பவத்தில் தீர்ப்பு!

சென்னை, பரங்கிமலை ரயில்நிலையத்தில் 2022ம் ஆண்டு, சதீஷ் என்பவர் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே கமெண்ட்ல சொல்லுங்க.
News November 27, 2025
சென்னையில் மாடு முட்டி முதியவர் பலி

சென்னை, மாதவரம் அடுத்த மாத்துாரில் கடந்த 14ம் தேதி சைக்கிளில் பால் போடும் பணியில் இருந்தார். ஒரு பசு மாடு, குதிரையுடன் உணவிற்காக தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளது. திடீரென மிரண்டு ஓடிய பசு மாடு முதியவர் ஆனந்த் மீது மோதியது. இதில் கீழே விழுந்த முதியவர் பலத்தகாயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு அரசு
ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று உயிரிழந்தார்.
News November 27, 2025
சென்னை மக்களே ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

சென்னை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)


