News April 15, 2025
நடந்து சென்றவர் இரு சக்கர வாகனம் மோதி பலி

நெமிலி அங்காளம்மன் கோயில் அருகில் நேற்று இரவு இரு சக்கர வாகனம் மோதி 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலியானார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இறந்தவர் கரியாக்குடல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பது இன்று போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
Similar News
News April 19, 2025
ராணிப்பேட்டை: கவலைகள் மறைய இங்கு போங்க

ஒரு எரிமலை வெடித்த பின்னர் அந்த எரிமலைக் குழம்புகளே சிவலிங்கமாகவும் நந்தியாகவும் மாறிய மலைதான் ராணிப்பேட்டை, லாலாப்பேட்டை அருகேயுள்ள காஞ்சனகிரி. ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம் மலையிலுள்ள பாறையைத் தட்டிப் பார்த்தால் வெண்கல மணிச் சத்தம் வெளிப்பட்டு எதிரொலிக்கும். இந்த கோயிலுக்கு வந்தால் கஷ்டங்கள் தீர்ந்து கவலைகள் மறையும் என்பது நம்பிக்கை. கவலையில் இருக்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 19, 2025
ராணிப்பேட்டை: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். அத்தகையான இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்துகொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க
News April 19, 2025
கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டையில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் ஏப்ரல் 25 முதல் 15 தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாம் பற்றி மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜே.யூ சந்திரகலா தெரிவித்தார்.