News April 27, 2025
நசியனுரில் கணவனை இழந்த பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

நசியனுார், ராயர்பாளையத்தை சேர்ந்த, கணவனை இழந்து தனியே வசிக்கும், 60 வயது பெண், தனக்கு ஆண் துணைதேவை என, திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த திண்டுக்கல சேர்ந்த மனோஜ்குமார் 29 விண்ணப்பிக்க, இருவரும் பேசி பழகி உள்ளனர். பின் அந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை திருடி சென்றான், அந்த பெண்மணி சித்தோடு போலீஸில் புகார் அளிக்க அந்த வாலிபரை கைது செய்த போலிஸார் கோபி கிளை சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 14, 2025
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று அக்.,14ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளன. MJP மஹால் சடையம்பாளையம் ரோடு-ரங்கம்பாளையம் (ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3) , புவன பவனம் திருமண மண்டபம்-கோபி (கோபி நகராட்சி), சமுதாயக்கூடம் -ஊஞ்சலூர் (ஊஞ்சலூர் பேரூராட்சி), மயூரா மஹால்- பெருந்துறை (பெருந்துறை பேரூராட்சி), ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் – ஆனைக்கவுண்டனூர் (அம்மாபேட்டை வட்டாரம்).
News October 13, 2025
ஈரோடு பெண்கள் கபடி அணி சாதனை

பள்ளி மாணவிகளுக்கான பெண்கள் கபடி போட்டியானது, ஈரோடு திண்டுக்கல் சேலம் அணிகளுக்கு இடையே நேற்று அக்டோபர் 12 நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டம் கபடி அணி இரண்டாம் இடம் பிடித்து, பரிசு தொகையை வென்றது. மேலும் நேற்று காலை பரிசுத்தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணி, மற்றும் அணியின் பயிற்சியாளருக்கு முதலமைச்சர் தனது பாராட்டினை தெரிவித்தார்.
News October 13, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.