News January 1, 2025

நகராட்சியுடன் இணையும் பஞ்சாயத்துகளின் பட்டியல்

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் இணையும் ஊராட்சிகளின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடுமலை நகராட்சியில் பெரிய கோட்டை, கணக்கம்பாளையமும், தாராபுரம் நகராட்சியில் கவுண்டன்புதூர், நஞ்சியம்பாளையமும் பல்லடம் நகராட்சியுடன் ஆறுமுத்தாம்பாளையம், வடுகபாளையம்புதூர், மாணிக்கபுரம் ஆகிய மூன்று ஊராட்சிகளும் இணைக்கப்படுகிறது. மேலும் அவிநாசி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளது.

Similar News

News November 19, 2025

திருப்பூர் சிறப்பு ரயில் இயக்கம்

image

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பராவுனிக்கு இன்று புதன்கிழமை ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம்-பராவுனி (06195) சிறப்பு ப்பு ரெயில் ரயில் நேற்று மாலை 4 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு பராவுனியை சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

News November 18, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 18.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை,பல்லடம், அவிநாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News November 18, 2025

திருப்பூரில் இலவச தையல் பயிற்சி!

image

திருப்பூரில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!