News January 2, 2025
நகராட்சியில் இனையும் ஊராட்சிகள்

உடுமலைப்பேட்டை நகராட்சியில் தற்போது 33 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் அருகாமையில் உள்ள பெரியகோட்டை ஊராட்சி மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சி ஆகிய இரண்டும் நகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு விடுத்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 10, 2025
ஆட்சி மொழி சட்டம் வார விழா

திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சி மொழி சட்ட வார விழா டிச.17 முதல் 26-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. சட்டம் இயற்றப்பட்ட நாளான 27.12.1956ஐ நினைவுகூரும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில் விழா தொடங்குகிறது. இந்த வாரத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள், வணிகர்களுக்கு சட்டம் குறித்து பயிற்சி, கருத்தரங்குகள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் பேரணி நடத்தப்படவுள்ளது என திருப்பூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (10.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்
News December 10, 2025
திருப்பூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.


