News April 12, 2025
தோஷங்கள் தீர்க்கும் பத்மகிரீஸ்வரர் !

திண்டுக்கல்: மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள பத்மகிரீஸ்வரர் கோயில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் பத்மகிரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். இந்தக் கோயிலில் வந்து வழிபட்டால் ராகு, கேது தோஷம் நீங்கி, திருமணத் தடை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News November 9, 2025
திண்டுக்கல் அருகே சிறுமி உட்பட 2 பேர் பலி!

திண்டுக்கல்: தொப்பம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திவலசு கிராமம் வழியாகச் செல்லும் அமராவதி ஆற்றில், 14 வயதுச் சிறுமி ஒருவர் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். இதனை கண்ட உடன் வந்த ஹசன் என்பவர், அச்சிறுமியை காப்பாற்றும் நோக்கில் உடனடியாக ஆற்றில் குதித்துள்ளார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
News November 9, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இன்று நவம்பர் 8 சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News November 8, 2025
திண்டுக்கல் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து இன்று முதல் 6 நாட்களுக்கு 1,000 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்படும். வைகை அணையில் இருந்து 6 நாட்களுக்கு நீர் திறப்பதால் 35,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். வைகை அணையில் நீர் திறப்பால் திண்டுக்கல், மதுரை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.


