News April 15, 2024

தோரணமலை முருகன் கோவிலில் விருது வழங்கும் விழா

image

கடையம், தோரணமலை முருகன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சித்திரைத் திருவிழாவான நேற்று பல்வேறு பிரிவுகளில் 17 பேருக்கு தோரணமலையான் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தன்னூத்து குமரன், மந்திரமூர்த்தி, செல்வக்குமார், பரமசிவன், கோபாலகிருஷ்ணன், மாதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Similar News

News January 2, 2026

தென்காசி மாவட்டத்தில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

image

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ஜனவரி 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள் உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

தென்காசி மக்களே அரசு பஸ்ஸில் பிரச்னையா.?

image

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99080 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 1, 2026

தென்காசி: கடைகள் ஏல அறிவிப்பு

image

தென்காசி ஊராட்சி ஒன்றியம் பிரானூர் ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகக் கடைகளை வரும் ஜனவரி 12ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கில் வைத்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் அனைத்து கடைகளும் வாடகைக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது. கடையை வாடகைக்கு ஏலம் எடுப்பவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று பிரானூர் ஊராட்சி தரப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!