News August 24, 2024

தோரணமலை கோயிலில் பிரபல நடிகர் தரிசனம்

image

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு, அம்பை & கடையம் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் வடிவேலு, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(ஆக.,23) கடையம் தோரணமலை முருகன் கோயிலுக்கு நடிகர் முனீஷ்காந்த் வருகை தந்து அங்கு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். தோரணமலை கோயில் பெருமையை கேள்விப்பட்டு அங்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

Similar News

News November 5, 2025

செண்பகாதேவி அம்மனை வழிபாடு செய்ய அனுமதி

image

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை வழிபாடு செய்வதற்கான பௌர்ணமி கிரிவலம் பாதை இன்று(நவ.04) அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரிவல நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். நாளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News November 5, 2025

சிறை காவலர் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு

image

2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 09.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை மணி 10.00 முதல் 12.40 மணி வரை (Main Written Examination) & (Tamil Language Eligibility Test) வைத்து நடைபெற உள்ளது. மாவட்ட எஸ்பி அரவிந்த் தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

image

தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு வரும் நவம்பர் 13 அன்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு 14ஆம் தேதியும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என பரிசு வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்தார்.

error: Content is protected !!