News August 26, 2024
தோப்பில் பதுக்கிய 300 கிலோ பீடி இலை பறிமுதல்

ராமநாதபுரம் தங்கச்சிமடம் கடற்கரை அருகே தோப்பில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி, தனிப்பிரிவு போலீசார் பாலசுப்ரமணியன், ராமமூர்த்தி நேற்று(ஆக.,25) நள்ளிரவு சோதனை நடத்தினர். அப்போது, தலா 30 கிலோ வீதம் 10 பண்டல்களில் பதுக்கிய பீடி இலை பண்டல்களை கைப்பற்றினர். கூரியர் வாகனத்தில் கொண்டு வந்து தோப்பில் பதுக்கியது குறித்து ரமேஷ் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News November 25, 2025
ராமநாதபுரத்தில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 109 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் சென்ன உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மது நுகர்வோர் விட்டுச்செல்லும் காலி மதுபான புட்டிகள் காரணமாக ஆங்காங்கே உடைந்து கிடந்து பொது மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் சுற்று சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் பொருட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நவ.26ம் தேதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
News November 25, 2025
ராநாதபுரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

ராமநாதபுரம் மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 25, 2025
ராமநாதபுரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


