News January 22, 2025
தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம், இயற்கை மூலிகை, சிறுதானியம் உணவுப் பொருட்கள், மதிப்பீடு பயிற்சி, அழகுக்கலை, பேக்கரி பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளது. இந்த பயிற்சிகளில் பங்கேற்று தொழில் தொடங்க விருப்பம் உள்ள பயனாளிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. share it now..
Similar News
News November 27, 2025
நாகை: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் இன்று காலை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குமரிக்கடல் அருகே நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு காற்று சுழற்சி காரமாக கடலில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
நாகை: விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் வயல்கள் ஏதேனும் மழைநீரில் மூழ்கி இருந்தால், பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீர் வடிந்த பிறகு விவசாயிகள் ஏக்கருக்கு யூரியா, ஜிப்சத்துடன் கூடிய வேப்பம் புண்ணாக்கை வயலில் இடவேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல் தேவைப்படுவோர் அருகில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம், உயர்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளுக்கான கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க மற்றும் கல்வி கடன் பற்றிய ஆலோசனைகளை பெற வரும் 27-ஆம் தேதி முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


