News March 17, 2025
தொழில் நிறுவனங்களை அதிகப்படுத்துவதற்கான ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதிதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அதிகப்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க அரசுத்துறை அலுவலர்களுடன் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 18, 2025
கள்ளக்குறிச்சியில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இன்று(மார்.18) பாலியல் வன்புணர்வு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக விசாரித்து நீதி வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரீதா தலைமை தாங்கினார். இதில் மாதர் தேசிய சம்மேளனத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
News March 18, 2025
கள்ளக்குறிச்சி: தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 2024- 25 ஆம் நிதி ஆண்டிற்கான வருடாந்திர கணக்கு முடிக்கும் பணிகள் அதிகமாக இருப்பதால் வியாழக்கிழமைகள் தோறும் நடைபெறும் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் மார்ச் 20-ஆம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 27-ஆம் தேதி என்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 18, 2025
கள்ளக்குறிச்சி; கைரேகை பதிவுக்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து நபர்களும் தங்களது கைரேகை பதிவினை வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நியாய விலை கடைகளில் பதிவு செய்ய வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று தெரிவித்துள்ளார். எனவே இதுவரை கைரேகை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது