News August 15, 2024
தொழில் கடன் முகாமிற்கு ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் திருநெல்வேலி கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான எம்.எஸ்.எம்.இ சிறப்புத் தொழில் கடன் முகாம் ஆக.19 முதல் செப்டம்பர். 6 வரை நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
தென்காசி: நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்!

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் செய்தி குறிப்பு: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, புளியங்குடி, கடையநல்லூர் மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 06.12.2025 சனிக்கிழமை (நாளை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News December 5, 2025
தென்காசி: ரவுடியை பிடிக்க சென்று சிக்கிய போலீசார்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி பாலமுருகனை பிடிக்க நேற்று (டிச.4) இரவு சென்ற போலீசார் மலையில் ஏறிய போது, மேலே செல்ல முடியாமல் நடுப்பகுதியில் 5 போலீசார் சிக்கி தவித்தனர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு போலீசாக மீட்கப்பட்டனர். இதனை பயன்படுத்திய பாலமுருகன் அப்பகுதியில் இருந்து தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
News December 5, 2025
தென்காசி: 10th போதும்.. அரசு வேலை., மீண்டும் வாய்ப்பு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14,967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச.4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச.11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <


