News December 6, 2024
தொழில்முனைவோருக்கு ஆன்லைன் வழியாக AI பயிற்சி

அண்ணா பல்கலைக்கழகம், தொழில்முனைவோர்களுக்கு, ஆன்லைன் வழியாக AI பயிற்சி, 45 நாட்களுக்கு வழங்க உள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe7AITHb4HwgHMsMDR8xygp5OeMRNJcpc7WMbpDPpLmL0txtA/viewform படிவத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/ மற்றும் cedau.outreach@gmail.com, 044 22359287/89 ஆகிவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 3, 2025
சென்னை: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News November 3, 2025
சென்னை: தம்பியை வெட்டி சாய்த்த தி.மு.க. நிர்வாகி

தி.நகர் மாம்பலம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தினகரன் (27), சரண் (24) சகோதரர்கள். இவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று வழக்கம்போல் இருவரும் மது அருந்திய போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தினகரன் சொந்த தம்பி என்றும் பாராமல் கத்தியால் சாரணை வெட்டி சாய்த்து போலீசில் சரண் அடைந்துள்ளார். தினகரன், தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
News November 3, 2025
சென்னை 3ஆம் இடம் பிடித்து அதிர்ச்சி- SO SAD!

நடப்பாண்டுக்கான மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் வருடாந்திர ஸ்வச் சர்வேஷன் கணக்கெடுப்பு நடைபெற்றது. மேலும், இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவிலேயே சென்னை 3ஆம் இடத்தில் உள்ளது. மேலும், மதுரை முதல் இடத்தில் உள்ளது. தமிழ் நாடின் 2 நகரங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. இதுகுறித்து உங்க கருத்து என்ன கமெண்ட்ல சொல்லுங்க. மத்தவங்களும் தெரிஞ்சிக்க ஷேர் பண்ணுங்க.


