News March 29, 2025

தொலைதூர படிப்புகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

image

பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் அர்விந்த் குப்தா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் 2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இவற்றில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் https://dde.pondiuni.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.ஏதேனும் விளக்கங்களுக்கு, உதவி மையத்தை 0413-2654439 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Similar News

News April 3, 2025

புதுவையில் மறுத் தேர்வு தேதி அறிவிப்பு

image

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் CBSC பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. கடந்த கல்வி ஆண்டில் 9 மற்றும் 11-ஆம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த புதுச்சேரி கல்வித்துறை உத்திரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும் மறுதேர்வு நடைபெறும்.

News April 3, 2025

BREAKING: புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு?

image

புதுச்சேரி வழுதாவூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், தற்போது சம்பவ இடத்தில் கோரிமேடு போலீசார் மற்றும் டி.நகர் போலீசார்; வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு தீயணைப்பு வாகனங்களும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

News April 3, 2025

புதுச்சேரி அரசு தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

image

புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் பணிகளை நிரப்புவதற்காக வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி அன்று காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வுகள், நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகின்றது. செய்முறை தேர்விற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!