News August 4, 2024
தொண்டையில் பந்து சிக்கி 8 மாத குழந்தை உயிரிழப்பு

பழவேற்காடு அருகே உள்ள அரங்ககுப்பம் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் – லாவண்யா தம்பதியின் 8 மாத குழந்தை சர்வேஷ், இன்று காலை வீட்டில் ரப்பர் பந்துடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பந்து தவறுதலாக குழந்தையின் வாயில் சென்று தொண்டையில் சிக்கியது. மூச்சுத்திணறிய குழந்தையை பெற்றோர்கள் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News December 25, 2025
திருவள்ளூர்: 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை!

ஆரம்பாக்கத்தில் கடந்த ஜுலை மாதம் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசாமைச் சேர்ந்த பிஸ்வகர்மாவுக்கு (35) இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.1.45 லட்சம் அபராதமும் , வழங்கி போக்சோ நீதிமன்றம் நேற்று(டிச.24) தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.1.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
காரில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த காரை போலீசார் தடுத்து சோதனை இட்டனர். அப்போது காரில் 40 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கார், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கேரளா மலப்புரத்தை சேர்ந்த சதக்கத்துல்லாவை கைது செய்தனர்.