News September 23, 2024
தொண்டி அருகே கடலில் கவிழ்ந்த படகை மீட்ட மீனவர்கள்
தொண்டி அருகே சோழியக்குடி லாஞ்சியடி மீனவர்கள் கடந்த 21ஆம் தேதி மீன் பிடிக்க சென்றபோது கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சக மீனவர்கள் சென்று கண்ணன், பாஸ்கரன், மதியழகன், கந்தன், ராபின்சன், நவனேஷ்
ஆகியோர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்ந்தனர். இந்நிலையில், இன்று (செப்.23) 4 விசை படகில் சென்று 4 படகுகளும் ஒன்றுடன் ஒன்று கயிற்றால் இணைத்து கவிழ்ந்த விசை படகை மீட்டனர்.
Similar News
News November 20, 2024
மாலை 4 மணி நிலவரப்படி 1,641 மிமீ மழை பொழிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 வரை ராமேஸ்வரம் 411, தங்கச்சிமடம் 322, மண்டபம் 261, பாம்பன் 237, ராமநாதபுரம் 75, கடலாடி 71.20, வட்டாணம் 65.60, முதுகுளத்தூர் 48.20, கமுதி 45.80, பள்ளமோர்குளம் 45. 20, பரமக்குடி 25.60, திருவாடானை 11.80 என மாவட்டம் முழுவதும் 1,641.80 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் இருந்த குடிசைகளை மழை நீர் முழுவதுமாக சூழ்ந்தது.
News November 20, 2024
பாம்பனில் மேக வெடிப்பால் மிக கனமழை
ராம்நாடு மாவட்டம் பாம்பனில் மிகக்குறுகிய இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக கனமழை பெய்துள்ளது. மேகவெடிப்பால் பகல் 11.30 மணி முதல் 2.30 மணி வரை பாம்பனில் 19 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மிக குறுகிய இடத்தில் வலுவான மேக கூட்டங்களால் மேக வெடிப்பு நிகழ்ந்து கனமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News November 20, 2024
ராமநாதபுரத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நாளை காலை 9 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் ராமநாதபுரத்தில் அதிகனமழைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.