News September 15, 2024
தொட்டில் குழந்தை திட்டம் கைவிடப்பட்டதா?

தொட்டில் குழந்தை திட்டம் செயல்படவில்லை, முடங்கி இருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயலலிதா தொடங்கி வைத்த அந்த திட்டம் கண்டுகொள்ள படாமல் இருப்பதாகவும், நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், அந்த திட்டம் தொடர்ந்து செயல்படுவதாகவும், அதிமுக அரசை விட தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News November 24, 2025
நவம்பர் 24: வரலாற்றில் இன்று

*1859 – சார்லஸ் டார்வின் ‘The origin of Species’ என்ற நூலை வெளியிட்டார்.
*1914 – இத்தாலிய சோசலிச கட்சியில் இருந்து முசோலினி விலக்கப்பட்டார்.
*1968 – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க பிறந்தநாள்.
*1992 – யாழ்ப்பாணம், பலாலி வான்படை தளத்தின் கிழக்கு பகுதி இராணுவ வேலி, விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
News November 24, 2025
தலாய் லாமா 130 வயது வரை வாழ்வார்: திபெத்திய அமைப்பு

தலாய் லாமா உடல் நலத்துடன் உள்ளதாக மத்திய திபெத்திய நிர்வாக மூத்த தலைவர் பென்பா செரிங் கூறியுள்ளார். தற்போதைய தலாய் லாமா இறப்பை சீனா விரும்புவதாக கூறிய அவர், தலாய் லாமா இன்னும் 20 ஆண்டுகள் கூட வாழ்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஜூலையில் 90 வயதை அடைந்த தலாய், அடுத்த பெளத்த மதகுருவை (தலாய் லாமா) தேர்ந்தெடுக்கலாம் என அறிவித்தார். இதில் அரசும் தலையிடும் என சீனா அறிவித்தது.
News November 24, 2025
குஜராத்தில் காலடி வைத்த புலி PHOTOS

குஜராத் மாநிலத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இளம் ராயல் பெங்கால் புலி காலடி வைத்துள்ளது. ரத்தன்மஹால் வனவிலங்கு சரணாலயத்தில் குடியேறியுள்ள புலி, மத்தியப் பிரதேசத்திலிருந்து இயற்கையாகவே இடம்பெயர்ந்திருக்கலாம் என்று வன அதிகாரிகள் நம்புகின்றனர். புலியின் போட்டோஸை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


