News August 7, 2024

தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 9 தேதி அன்று 275 பேருந்துகளும் 10 தேதி 315 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

Similar News

News July 6, 2025

சைபர் மோசடி குறித்து சென்னை காவல்துறை முக்கிய அறிவுரை

image

சென்னை பெருநகர காவல் துறை சைபர் மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளது. மோசடியில் சிக்கினால், உடனடியாக வங்கி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பரிவர்த்தனைகளை முடக்க வேண்டும். மேலும், 1930 என்ற எண்ணுக்கு அழைத்து உதவி பெறலாம். போலி இணையதளங்கள் மூலம் மக்கள் ஏமாறாமல் இருக்க, அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News July 5, 2025

சென்னை வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

image

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6 முதல் 10 வரை சென்னை மக்கள் இரவு 8 மணி முதல் 8.05 மணி வரை ISS-ஐ வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும்.

News July 5, 2025

சென்னையில் நாளை மினி மாரத்தான்

image

சர்வதேச கூட்டுறவு நாளை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை சார்பில் ‘COOP-A-THON’ மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் நாளை (ஜூலை 6, ஞாயிறு) காலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது. “சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்” என்ற மையக்கருத்தில் 5 கி.மீ. தூரத்திற்கான இந்த ஓட்டப்பந்தயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.

error: Content is protected !!