News August 14, 2024
தொடர் விடுமுறையால் உயர்ந்த ஆம்னி பேருந்துகட்டணம்

சுதந்திரதினத்தை முன்னிட்டு சனி, ஞாயிறு தொடர் விடுமுறையின் எதிரொலியாக ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது ரூ.2400 முதல் ரூ.3000 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணமும் கனிசமாக உயர்ந்துள்ளது.
Similar News
News November 14, 2025
சென்னை: பிரபல இயக்குனர் காலமானார்!

பிரபல தமிழ் இயக்குனர் வி.சேகர் கடந்து 10 நாட்களுக்கு மேலாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை (நவ-14) காலமானார். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, விரலுக்கேத்த வீக்கம், வீட்டோட மாப்பிள்ளை’ உள்ளிட்ட படங்களை வி.சேகர் இயக்கியுள்ளார்.
News November 14, 2025
சென்னை: டிகிரி/ டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் Sales Consultant பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு டிகிரி/ டிப்ளமோ முடித்த 22- 30 வயது உடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.20,000 – ரூ.25,000 வழங்கப்படும். இந்த பணிக்கு 1-3 வருடம் அனுபவம் அவசியம். விருப்பமுள்ளவர்கள் <
News November 14, 2025
சென்னை: நிதி மோசடி வழக்கில் சிறையில் அடைக்க உத்தரவு

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் சரணடைந்த தேவநாதனை நவ.24 வரை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.100 கோடி டெபாசிட் நிபந்தனையை நிறைவேற்றாததால் தேவநாதனை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இடைக்கால ஜாமின் நீட்டிப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் தேவநாதன் சரண் அடைந்தார். இதை தொடர்ந்து அவரை நவ.24ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


