News April 25, 2025

தொடர் குற்றச்செயல்- குண்டர் சட்டத்தில் பெண் கைது!

image

சேலம் மாநகரில் பொதுவிநியோகத் திட்ட அரிசிக் கடத்தி தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த பரிமளா என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை. இதையடுத்து அவர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News April 26, 2025

விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

image

“தென்னை மற்றும் பாக்குகளில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட வேளாண்மைத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ள பயிர் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கோடைகாலம் என்பதால் விவசாயிகள் தங்களிடம் உள்ள தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக லாபம் பெறுவதற்கு சொட்டுநீர் பாசனம் திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

News April 26, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பா விதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி இன்று ஏப்ரல்25 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.

News April 25, 2025

சேலம் மதுக்கடைகளை  மூட உத்தரவு 

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான கடைகள், பார்கள், மன மகிழ் மன்றங்கள் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு  கண்டிப்பாக மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி உத்தரவு விடுத்துள்ளார். மீறி திறந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!